Thursday, April 28, 2011



வைகறையே வருக
மனதில் தினமும் புதிதாய்ச் சிலிர்த்தெழும்பும்
இசையே நீ வருக
என்னுள் அசைவே நீ வருக
என்றோ மறந்தப் பாடல்
காற்றில் தவழ்ந்து வரும்
எங்கோ தொலைந்ததுத் தேடல்
உன் வருகையில் மலர்ந்தக் கணம்
உன் விழியில் விடிவைத் தேடும்
எல்லையிலா வானம் (2)
வைகறையே வருக...
உன்
கண்களில் விம்மும் திவலை
மனதில் அலை மோதும்
நேரமெனும் தொடர்க் கவலை
உன் மடியில் ஓய்ந்து விடும்
விரியும் வானம், நீயும் நானும்,
குருகும் நம் உலகம், இனிமேல் இது போதும்
வைகறையே வருக...

No comments: