இடை வழியில் நடுவானம் இலக்கானதே
கரையோரம் தடுமாறிக் கால் நின்றதே
காணாத காற்றாகவே
தோணாத கவிதை போலே
மின்னல்களோ இரவின் பின்னல்களோ – நின்று
நில்லாமல் புரண்டோடும் எண்ணங்களோ
முத்தங்களோ மழையின் சத்தங்களோ –சாரல்
பின்னும் வலைக்குள் விண்மீன்களின் யுத்தங்களோ
பனிமொட்டில் கதிர் வீழ்ந்ததே
நினைவெங்கும் நனைகின்றதே
மழலைக்குள் பூச்செண்டு ராகங்களே
தீராத ஆசைகள் யாகங்களே
இடையசைவின் இடையில், உன் மௌனங்களில்
ஒரு நொடியில் ஒரு நூறு சோகங்களே
கதவோரம் சாயும் கன்னம் – என்
கனவோரம் விரியும் வண்ணம்
No comments:
Post a Comment